உள்ளூர் செய்திகள்

நல்லவர் காட்டும் பாதையில் நடப்போம்

தெருவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டமாக நின்றுகொண்டிருந்த பன்றிகளுள் ஒன்று அவர் பின்னால் சென்றது. அதைபார்த்து மற்றவைகளும் பின்தொடர்ந்தன. அவர் அதை கசாப்புக்கடைக்காரரிடம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டார். இதை கவனித்த அவரது நண்பர், பன்றிகள் எப்படி உன்னை பின்தொடர்ந்து வந்தன என்று கேட்டார். நான் அதற்கு விருப்பமான பயறுகளை கீழே போட்டதால் அவை வந்தன என்றார். இதுபோலவே சினிமா, 'டிவி', கம்ப்யூட்டர், அலைபேசி மூலம் தேவையில்லாத விஷயங்களில் பாவத்தை செய்ய துாண்டுகிறது சாத்தான். எனவே நல்லவர் காட்டும் பாதையில் நடப்போம்.