உள்ளூர் செய்திகள்

ராஜ முத்திரை

இங்கிலாந்தைச் சேர்ந்த பணக்காரர் ஒருவரின் மனைவி காலமானார். அவர்களுக்கு குழந்தை இல்லை. கோடிக்கணக்கான சொத்துக்கள்... ஆனாலும், யாருக்கும் எதையும் கொடுக்க முன்வரவில்லை. இரண்டு ஆண்டுகளில் பணக்காரரும் இறந்து போனார். அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அவரது வீட்டிற்குள் சென்று அகப்பட்ட பொருட்களை சுருட்டத் தொடங்கினர். இதையறிந்த உறவினர்கள் அரசாங்கத்திடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மகாராணியார் உத்தரவுப்படி அரண்மனைச் சேவகர்கள் பணக்காரரின் வீட்டிற்கு சீல் வைத்தனர். இதையறிந்த மக்களுக்கு பயம் ஏற்பட்டது. அரசாங்கம் விசாரணை செய்தால் தண்டனைக்கு ஆளாவோம் என பயந்து எடுத்துச் சென்ற பொருட்களை அந்த வீட்டில் விட்டுச் சென்றனர். இங்கிலாந்தின் ராஜ முத்திரைக்கு மக்கள் மத்தியில் அந்தளவுக்கு பயமும், பாதுகாப்பும் இருந்தது.சொத்தை எப்படி அரசு கையகப்படுத்தியதோ அது போல நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்டால் 'ஆண்டவருக்கு உரிய இவனைத் தொட யாருக்கும் அதிகாரம் இல்லை' என்ற பாதுகாப்பான முத்திரை கிடைக்கும்.