தேடிவரும் புகழ்
UPDATED : ஜூலை 02, 2021 | ADDED : ஜூலை 02, 2021
சீனாவில் ஹட்சன் என்னும் போதகர் இருந்தார். அவரைப் பற்றி ஒருநாள் அவரது சபையைச் சேர்ந்த பெண்கள் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். 'தான் செய்த சாதனைகளை எண்ணி என்றாவது ஹட்சன் பெருமைப்பட்டதுண்டா' எனக் கேட்டாள் ஒருத்தி. அதற்கான விடையை அவர்களால் அறிய முடியவில்லை. ஹட்சனின் மனைவி அப்போது அங்கு வந்தாள். அவரிடம் சந்தேகத்தை கேட்க அவருக்கும் தெரியவில்லை. எனவே ஹட்சனிடமே விடையளிக்க வேண்டினர்.''எதைக் குறித்து பெருமை கொள்வது. அந்தளவிற்கு எதையும் நான் செய்யவில்லையே!” என்றார் அடக்கத்துடன்.அதற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. அக்கறையுடன் கடமையுடன் ஈடுபட்டால் மனிதனுக்கு புகழ் தேடி வரும்.