உள்ளூர் செய்திகள்

தேடி வரும் பெருமை

சீனாவில் வசித்த ஹட்சன் டெய்லர் என்ற புகழ்பெற்ற போதகரைப் பற்றி, ஒரு சமயம் இரண்டு தோழிகள் பேசிக் கொண்டிருந்தனர். 'டெய்லர் எப்போதாவது தனது சிறந்த சாதனைகளுக்காக பெருமைப்பட்டிருப்பாரா?' என்று அவர்களுக்குள் வாதம் ஏற்பட்டது. அதற்கான விடையை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. எனவே டெய்லரின் மனைவியிடம் சென்று தங்களது சந்தேகத்தை கேட்டனர். அவருக்கும் இந்த கேள்விக்குப் பதில் தெரியவில்லை. எனவே டெய்லரிடமே அவர்கள் தங்கள் சந்தேகத்திற்கு பதில் கூறும்படி கேட்டார்கள். ஹட்சன் டெய்லர், ''நான் எதைக்குறித்து பெருமை பாராட்டுவது? நான் பெருமைப்படும் அளவிற்கு எதையுமே செய்யவில்லையே!'' என்று தன்னடக்கத்துடன் கூறினார்.அவரது பெருமைக்கான உண்மையான காரணம் அப்போது தான் அந்தப் பெண்களுக்கு விளங்கியது. பெருமை பேசாமல் செய்ய வேண்டிய செயல்களைக் கடமையாக கருதி சிறப்பாகச் செய்யுங்கள். பெருமை தானாக தேடி வரும்.