எளிமையான வாழ்வு
UPDATED : செப் 29, 2023 | ADDED : செப் 29, 2023
டயோஜினிஸ் என்னும் விஞ்ஞானி எளிமையானவர். ஒரு நாள் அவரைக்காய் சூப் தயார் செய்து கொண்டிருக்கும் போது . அவரது நண்பரும் விஞ்ஞானியுமான அரிஸ்டிபஸ் அங்கு வந்தார். மன்னரை புகழ்ந்து சன்மானம் பெறுவதில் புகழ் பெற்றவர் அந்த நண்பர். அவர் டயோஜினிஸ் மீது பரிதாபப்பட்டு, ''என்னைப் போல் நீங்களும் மன்னரை புகழக்கூடாதா என அவரது ஏழ்மை நிலையை பார்த்து கேட்டார். அதற்கு அவர், ''என்னைப்போல் நீங்களும் எளிமையாக சூப் குடித்திருந்தால், மன்னரை புகழ வேண்டிய நிலை வந்திருக்காதுதானே'' என்றார். அரிஸ்டிபஸ் முகத்தில் ஈயாடவில்லை.