பிரார்த்தனையின் சக்தி
UPDATED : அக் 10, 2021 | ADDED : அக் 10, 2021
பிறர் உதவி செய்யமுடியாத சூழல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த நேரத்தில் தைரியசாலிகள் கூட கலங்கி விடுவர். பேருந்து ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞன் மேத்யூவின் காலடியில் பாம்பு ஒன்று இருந்தது. திடீரென அந்த பாம்பு அவன் உடல்மீது ஏறியது. அருகில் இருந்தவர்கள் 'அசையாதே' என அவனை எச்சரித்தனர். பயத்தில் தத்தளித்தான் இளைஞன். பாம்பு அவனை விட்டு இறங்குவதாக தெரியவே இல்லை. பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழி இல்லை. மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். என்ன ஆச்சரியம். சிறிது நேரத்தில் பாம்பு அவனை விட்டு விலகியது. பிரார்த்தனை செய்தால் வெற்றி உங்களுக்கே.