ஏன் எதற்கு என யோசி...
UPDATED : ஜூன் 09, 2023 | ADDED : ஜூன் 09, 2023
அமெரிக்க அதிபர் லிங்கன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர் எதிர்க்கட்சியினர். அவர்களை பார்த்து '' நரியின் வாலையும் சேர்த்து எண்ணினால் அதற்கு மொத்தம் எத்தனை கால்கள்'' என கேட்டார் லிங்கன். எல்லோரும் ஐந்து என்றனர். அதுதான் இல்லை. ஒரு விஷயத்தை ஒருவர் தவறாக சொல்லுவதால் நரியின் கால்கள் ஐந்தாக மாறாது அது போல் தான் எந்த விஷயத்தையும் உண்மை எது என ஆராயாமல் குற்றம் சொல்லாதீர்கள் என்றார் லிங்கன். எதிர்கட்சியினர் யோசிக்க ஆரம்பித்தனர்.