உள்ளூர் செய்திகள்

திருப்புமுனை

போர்ச்சுக்கலை சேர்ந்தவர் வாஸ்கோடகாமா. இவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சூறாவளி தாக்க, கப்பல் திசை மாறியது. நாளாக நாளாக உணவு, குடிநீர் தீர்ந்தது. இதனால் பயணிகள் அலறினர். ஆனால் வாஸ்கோடகாமா தன்னம்பிக்கையை இழக்காமல், அனைவருக்கும் தைரியமூட்டினார்.இப்படி ஒருநாள் பொழுது புலர்ந்தது. சூறாவளியும் ஓய்ந்தது. ஆகாயத்தில் பறவைகள் கூட்டத்தைக் கண்டவர்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். வாஸ்கோடகாமாவோ எந்தச் சலனமும் இன்றி, தொலைநோக்கி மூலம் கரையைத் தேடினார். அப்போது மலைகள், மரங்கள் நிறைந்த தீவு ஒன்றை கண்டுபிடித்தார். அங்கு சென்றதும் உணவு, குடிநீர் எரிபொருள் என அனைத்தும் கிடைத்தன.இறுதி வரை தன்னம்பிக்கையுடன் பயணித்ததால் கிடைத்த வெற்றி இது. இந்த தீவிற்கு வாஸ்கோடகாமா சூட்டிய பெயர் என்ன தெரியுமா... நன்னம்பிக்கை முனை. ஆம்! தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், உங்களுக்கும் திருப்புமுனை உண்டாகும்.