எப்போது வரும் மகிழ்ச்சி
UPDATED : ஜூன் 09, 2023 | ADDED : ஜூன் 09, 2023
அதிகாரிகள் செய்த தவறால் மன்னருக்கு மனம் பாதித்து உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். மருந்து சாப்பிட்டும் உடம்பு குணமாகவில்லை. அரண்மைனை வைத்தியர் அவரை பரிசோதித்தபின் மனதில் தான் பிரச்னை என தெரிந்து கொண்டார். ''எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதரின் மேல்ஆடையை மன்னருக்கு போர்த்தினால் உடல் சரியாகும்''என சொன்னார். அதன்படியே வீரர்களும் தேடினர். ஒரு இளைஞர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தனர். அவரிடம் விபரத்தை சொல்லி உம்முடைய ஆடையை கொடுங்கள் என கேட்டனர். '' நான் மேல் ஆடை அணிவதில்லை. நடந்த தவறை திருத்துங்கள். மகிழ்ச்சி தானாக வரும்'' என்றார் இளைஞர்.