உள்ளூர் செய்திகள்

வெற்றியாளராக விருப்பமா...

இரு நண்பர்கள் தொழில் தொடங்க வேண்டும் என தீவிரமாக முயற்சித்தனர். அவர்களில் ஒருவர் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அதிகவிலைக்கு விற்று வந்தார். இருந்தாலும் அவரால் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை. மற்றொருவர் நன்கு யோசித்து எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க ஷாப்பிங்மால் ஒன்றைத் தொடங்கினார். ஏழை, பணக்காரர்கள் என பலரும் அங்கு வந்தனர். நாளடைவில் அதிக பலனை அவருக்கு அளித்தது. ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பு நன்கு யோசி. பின்னர் வெற்றி பெற அதனை செயல்படுத்துங்கள். அது எல்லோருக்கும் பயன்படும்.