குண்டு நண்பர்
UPDATED : ஆக 02, 2024 | ADDED : ஆக 02, 2024
குண்டான நண்பர் ஒருவர் அறிஞர் பெர்னாட்ஷாவை நீண்ட நாளுக்கு பிறகு பார்த்தார். 'ஏன் பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி ஒல்லியாக இருக்கிறீர்கள்?' எனக் கிண்டல் செய்தார். 'உண்மை தான். பஞ்சம் எப்படி வந்தது என்பதை உங்களின் உருவத்தை பார்த்தாலே தெரிகிறதே' என பதிலடி கொடுத்தார் பெர்னாட்ஷா. தலை குனிந்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் அந்த குண்டு நண்பர்.