நல்லா பேசுங்க
UPDATED : ஆக 02, 2024 | ADDED : ஆக 02, 2024
சிறுவன் ஐன்ஸ்டீனிடம் அவனது தந்தை திசை காட்டும் கருவியை காட்டி, 'கடலில் பயணம் செய்யும் மாலுமிகள் இதை பயன்படுத்துவார்கள்' என்றார்.'எப்படி இதற்குள் இருக்கும் முள் சரியான திசையை காட்டும்' என சிந்தித்தபடியே இருந்தான் சிறுவன். வீட்டுக்கு வந்த மாமா 'பாருங்கள் ஐன்ஸ்டீன் யோசித்தபடி இருக்கிறான். எதிர்காலத்தில் விஞ்ஞானியாகப் போகிறான்' எனக் கிண்டல் செய்தார். அதைக் கேட்ட அவனது தாயார், 'ஆமாம், என் மகன் பெரிய விஞ்ஞானியாக வருவான்' எனப் பதிலளித்தார். தந்தையின் வழிகாட்டுதலுடன் தாயாரின் வார்த்தையை உண்மையாக்கினார் ஐன்ஸ்டீன். குழந்தைகளிடம் நல்லா பேசுங்க... நல்லதையே பேசுங்க...