மறக்காதே
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
நடக்க முடியாதவரும், பார்வை குறைபாடு உள்ள ஒருவரும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்தபடி வாழ்ந்தனர். இதைக் கண்டு மகிழ்ந்த நீதிதேவதை அவர்களின் குறையை போக்கியது. அதன் பின் இருவரும் உழைப்பால் உயர்ந்து நல்ல நிலையை அடைந்தனர். சில ஆண்டுகள் கழித்து ஏழை போல வேடமிட்டு தேவதை அவர்களைச் சந்திக்க வந்தது. 'எனக்கு பசிக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள்' எனக் கேட்டது. அவர்களில் முதலாமவர் இரக்கமின்றி விரட்டினார். மற்றொருவர் ரொட்டி கொடுத்து பசியைப் போக்கினார். தேவதை தன் உண்மை வடிவத்தைக் காட்டி அவருக்கு பரிசளித்தது. கடந்து வந்த பாதையை மறக்காதவனே நல்ல மனிதன்.