உள்ளூர் செய்திகள்

பாவம் யாருக்கு

அறிஞர் ஒருவரை தன் வீட்டிற்கு அழைத்தார் ஒருவர். 'என் வீட்டில் உணவு சாப்பிட வேண்டும்' என வற்புறுத்தவே சம்மதித்தார். மாமிச உணவு பரிமாற அவரும் சாப்பிட்டார். அப்போது, 'மாமிசம் சாப்பிட்டீர்கள். உயிர்களைக் கொன்ற பாவம் தின்றவரைச் சேரும் என்பார்கள். இந்த பாவம் யாரைச் சேரும்'' எனச் சிரித்தார் அந்த நபர். ''தீயவன் ஒருவன் தன் பணத்தில் மனைவி, குழந்தைகளுக்கு மாமிச உணவு அளித்தால் அந்த பாவம் குடும்பத்தைச் சேர்வதில்லை'' என்றார் அறிஞர்.