ஒளி பிறந்தது
UPDATED : டிச 26, 2024 | ADDED : டிச 26, 2024
ஒரு முறை ஆண்டவர் தன் சீடர்களுடன் எரிகோவின் வீதியில் சென்றார். அவர் வருவதைக் கேள்விபட்ட பார்வையற்ற ஒருவன், 'தாவீதின் குமராரே! எனக்கு இரங்கும்' என காதில் விழும்படி சத்தமாகக் கூப்பிட்டான். அருகிலிருந்தவர்கள் சத்தமிடாதே என அதட்டினர். ஆனால் மீண்டும் 'எனக்கு இரங்குமய்யா' என வேகமாக சத்தமிட்டான். அருகில் ஆண்டவர் வந்தார். அவரின் காலைப்பிடித்து எனக்கு பார்வை வழங்குங்கள் என உரிமையுடன் கேட்டான். அவன் தலையின் மீது கை வைத்ததும் கண்ணில் ஒளி பிறந்தது.