உள்ளூர் செய்திகள்

நினைத்தாலே இனிக்கும்

ஹங்கேரியைச் சேர்ந்த ராணுவ வீரர் கரோலி டகாஸ். நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவர் சிறந்த​ உதாரணம். துப்பாக்கி சுடும் திறமை கொண்ட​ இவர், ராணுவ பயிற்சியின் போது நடந்த​ விபத்தில் வலது கையை இழந்தார். அடுத்தடுத்து ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது உலக​ போர் நடந்ததால் நடத்தப்படவில்லை. இருந்தாலும் வயது கூடிக் கொண்டே இருந்தது. மனம் தளராமல் இடது கையிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து 1948ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.அவநம்பிக்கை, மனச்சோர்வு மறைய இவரின் பெயரை மனதார நினைத்தாலே வாழ்வு இனிக்கும்.