உள்ளூர் செய்திகள்

விட்டுக்கொடு

புதுமணத் தம்பதி லாரன்ஸ், ஸ்டெல்லா கை கோர்த்தபடி வயல்வெளி வழியே நடந்து சென்றனர். சாலையோரத்தில் நெற்கதிர்கள் அறுக்கப்பட்டு வரிசையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. எவ்வளவு அழகாக கத்தரிக்கோலால் கதிர்கள் வெட்டப்பட்டுள்ளன என்றாள் மனைவி. இல்லை அரிவாளால் அறுக்கப்பட்டுள்ளது என்றார் கணவர். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதாக தெரியவில்லை. வாக்குவாதம் முற்றியது. அருகில் தெரிந்த பாலத்தில் இருந்து கீழே குதிப்பதாக சொன்னாள் ஸ்டெல்லா. அப்படியே செய்; அதுதான் நல்லது எனச் சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான் லாரன்ஸ். நிதானமுடன் பேசுங்கள் என்கிறது பைபிள்.