உள்ளூர் செய்திகள்

சிறந்த நண்பர்

டாயில் எழுதிய நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரத்தின் பெயர் ஷெர்லாக் ஹோம். டாயிலுக்கு நெருங்கிய நண்பர்கள் 12 பேர் இருந்தனர். ஒருநாள் நண்பர்களுக்கு தனித்தனியாக மொட்டைக் கடிதம் அனுப்பினார். அதில், 'உங்கள் ரகசியம் அம்பலமாகப் போகிறது. தப்பி ஓடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தை படித்ததும் 12 பேரும் நாட்டை விட்டு ஓடினர். சட்ட விரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்ததே இதற்கு காரணம். போலீசில் நண்பர்கள் சிக்கி விடக் கூடாது என்பதற்காக டாயில் இதைச் செய்தார். அவர்களைத் திருத்த வேறு வழி தெரியவில்லை. 'உங்கள் பாவம் உங்களை தொடரும்' என்கிறது பைபிள்.