உள்ளூர் செய்திகள்

இப்படி இருங்க மாணவர்களே!

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அறிஞர் சாக்ரடீஸிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவரோ கொக்கு, கோழி, உப்பு போல இருக்க வேண்டும் என்றார். புரியவில்லை என்றார் அவர். கொக்கினை போல படிப்பில் குறிக்கோளுடனும், கோழியை போல தேவையானதை மட்டும் தேடி எடுத்து அறிந்து கொள்ளவும், உணவிலுள்ள உப்பினை போல எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றார் அறிஞர்.