கேலி செய்யாதீர்கள்
UPDATED : ஏப் 06, 2023 | ADDED : ஏப் 06, 2023
ஒரு செல் உயிரில் இருந்து குரங்கின் வழியாக மனிதன் தோன்றினான் என்ற தத்துவத்தை விளக்கினார் அறிஞர் சார்லஸ் டார்வின். சபையில் அவரை கேலி செய்ய விரும்பிய ஒருவர், ''குரங்கில் இருந்து மனிதன் உருவானான் என்பதை உங்கள் தோற்றத்தை வைத்து முடிவெடுத்துள்ளீர் என நினைக்கிறேன் என்ன சரிதானா'' என கேட்டார். அதற்கு கோபப்படாமல் அமைதியாக சொன்னார். நான் கண்டுபிடித்த தத்துவத்திற்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான் என்றார். பிறகு என்ன கேலி செய்தவரின் முகம் மாறி விட்டது.