உள்ளூர் செய்திகள்

வேண்டாம் சோம்பல்

சோம்பலுக்கு ஒரு நாளை கொடுத்தால் அது அடுத்து வரும் நாட்களையும் திருடிக் கொள்ளும் என்பது உலக வழக்கம். சோம்பலுக்கு உடன்பட்டவர்களின் வாழ்வு வீணாகிவிடும். ஒரு மரத்தில் காக்கை ஒன்று அசையாமல் இருந்தது. அதைப்பார்த்த முயல் ஒன்று நானும் உன்னை போல இருக்கட்டுமா எனக் கேட்டது. உன் இஷ்டம் என்றது காக்கை. ஆடாமல் அசையாமல் இருந்த முயலை அங்கு வந்த நரி சாப்பிட்டது. பிறரை பார்த்து சோம்பல் கொள்ளாதீர்கள்.