இல்லாத ஒன்றிற்கு...
UPDATED : ஜூன் 23, 2023 | ADDED : ஜூன் 23, 2023
ஒரு இடத்தில் குளிர்ந்தநீரும் சுடுநீரும் அருகருகே ஊற்றாக வந்தது. சுற்றுலா வந்த பயணி ஒருவர் அங்குள்ளவர்களிடம் 'நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இரண்டு தண்ணீரும் ஒரே இடத்தில் கிடைக்கின்றதே' என கேட்டார். அதை கேட்ட பெரியவர் ஒருவர் இரண்டு தண்ணீரையும் கொடுத்த ஆண்டவர் சோப்பை கொடுக்கவில்லையே என சொன்னார். இப்படி தான் பல மனிதர்களின் மனம் இருப்பதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றை தேடி செல்கிறது.