உங்களிடம் உள்ளதை கொடுங்கள்
UPDATED : ஆக 11, 2023 | ADDED : ஆக 11, 2023
ஜெர்மனி இரண்டாக பிரிக்கப்பட்டு பெரிய தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது. ஒருநாள் கிழக்கு ஜெர்மனியில் உள்ளவர்கள் அதிகமான குப்பைகளை கொண்டு வந்து மேற்கு பகுதியின் எல்லையில் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர். பதிலுக்கு மேற்கு ஜெர்மனிகாரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? லாரி நிறைய ரொட்டிகள், பழங்கள், மளிகை பொருட்களை எடுத்து வந்து அந்த எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர். அதோடு தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான் என வாசகம் எழுதிய அட்டையையும் வைத்து சென்றனர். உண்மை தான். நம்மிடம் உள்ளதை தானே பிறருக்கு தருவோம்.