உள்ளூர் செய்திகள்

நம்பிக்கை வேண்டும்

பலரும் நினைத்தது நடக்கவில்லையே என வருந்துகின்றனர். இதற்கு காரணம் பயம், சந்தேகம். முதலில் நம்பிக்கை வேண்டும். வாழ்வில் துன்பமே ஏற்பட்டாலும் அதுவும் நன்மைக்கே என ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இரண்டாவது பாவச்செயல்கள். செய்த பாவத்திற்காக வருந்தி மன்னிப்பு கேளுங்கள். பிறகு பாவத்தை செய்யாமல் இருங்கள். நல்ல எண்ணம் கொண்டவர்களின் கோரிக்கையை ஆண்டவர் ஏற்றுக்கொள்வார்.