நம்பிக்கை
UPDATED : ஆக 25, 2023 | ADDED : ஆக 25, 2023
விசுவாசமாக இருப்பவர்களுக்கு தேவதை உணவு கொடுக்கும் என குழந்தைக்கு சொல்லி கொடுத்தாள் தாய் மேரி. ஆனால் அன்று முழுவதுமே அவர்கள் சாப்பிடாமல் இருந்தனர். திடீர் என பெய்த மழையால் வீட்டின் வாசல் கதவை பூட்டினாள். குழந்தை சொன்னது அம்மா கதவை திறந்து வை. தேவதை சாப்பாடு கொண்டு வருமே என சொன்ன போது மகளின் நம்பிக்கையைக் கண்டு வியந்தாள். இந்த நேரத்தில் அங்கு மழைக்கு ஒதுங்கிய வியாபாரி ஒருவர், பழம் நிறைந்த கூடையை வாசலில் வைத்தார். விசுவாசமான தாயின் வார்த்தையும், மகளின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.