இருக்கும் இடத்தில் இருந்தால்...
UPDATED : ஜூன் 09, 2023 | ADDED : ஜூன் 09, 2023
சர்க்கஸ் சிங்கம் காட்டில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டு கூடாரத்தை விட்டு காட்டிற்குள் ஓடியது. பசி எடுக்கவே மற்ற சிங்கங்களை போல அதனால் வேட்டையாட முடியவில்லை. அது தன் பழைய நிலையை நினைத்தது. பிறகென்ன! சர்க்கஸ் கூடாரத்திற்கே திரும்பியது சிங்கம். அது போல அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே.