மகிழ்ச்சி பொங்கும்
UPDATED : ஜன 19, 2023 | ADDED : ஜன 19, 2023
தித்திக்கும் கரும்பைப் போன்றது நமது வாழ்க்கை. கரும்பில் உள்ள கணுக்களைப் போல், தடைகள் வந்தாலும் அதை கடந்தால் சுவையான ரசம் பொங்கும். ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை. வாழ்க்கையை நரகமாகவே கருதி, மகிழ்ச்சியை தொலைக்கின்றனர். இவர்கள் நினைத்தால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். அதற்கு சுயக் கட்டுப்பாடும் அவசியம். இப்படி இருந்தால் மகிழ்ச்சி பொங்கும்.