வேலையைக் காதலி!
UPDATED : டிச 20, 2022 | ADDED : டிச 20, 2022
பலரும் வேண்டா வெறுப்புடன் வேலை செய்வதை பார்த்திருப்போம். இவர்கள் பணியிடத்திலும் சரி. குடும்பத்தினருக்கும் சரி. நல்லவராக இருக்க மாட்டார்கள். சொல்லப்போனால் இவர்களால் தங்களுடைய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாது. இதற்கு தீர்வு என்ன? எதை செய்தாலும் அதை மனம் விரும்பிச் செய்ய வேண்டும். அமெரிக்க எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் இதை அழகாக சொல்கிறார். உன் வேலை என்பது அன்பின் வெளிப்பாடு. நீ செய்யும் வேலையை உன்னால் காதலிக்க முடியவில்லை எனில் அதனால் எந்தவித பயனும் கிடைக்காது. வேலையை நேசிக்கும்போது அதோடு நீ உன்னை பிணைத்துக் கொள்கிறாய். இதுபோல் வேலையை காதலிக்க ஆரம்பித்துவிட்டால் ஆனந்தம் ஆரம்பமாகிவிடும்.