அன்பை பகிர்வோம்
UPDATED : ஆக 09, 2022 | ADDED : ஆக 09, 2022
உலகம் இயங்க மூலகாரணமாக இருப்பது அன்பு. இதுதான் நமது வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. உயிர்கள் எல்லாம் இதற்காகத் தான் ஏங்குகின்றன. ஆனால் அதை உணராமல் சிலர் பணம், பதவியைத் தேடி அலைகின்றனர். ஆரம்பத்தில் இவை சந்தோஷம் அளித்தாலும், முடிவில் வெறுமையை உண்டாக்கும். எனவே பிறரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மன நிம்மதியுடன் வாழுங்கள்