உள்ளூர் செய்திகள்

நல்லதை சிந்திப்போம்

மனிதன் பிறக்கும் போதே மரணமும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் புரிந்து கொள்ளாமல் பலரும் தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். மரணம் குறித்து பைபிள் சொல்வதை கேளுங்கள்.* புழுதியிலிருந்து வந்தாய்; புழுதிக்கே திரும்பி போவாய். * எல்லோரும் இலையைப் போல் வெளிறிப் போவோம்.* மரங்களின் அருகே கோடரி வைக்கப்பட்டுள்ளது. நற்கனி கொடுக்காத மரம் வெட்டி அக்னியில் போடப்படும்.எனவே நல்லதை சிந்தியுங்கள். நல்லதை மட்டும் செய்யுங்கள்.