இப்படி கேட்கலாமா...
UPDATED : ஜூலை 14, 2023 | ADDED : ஜூலை 14, 2023
அறிஞர் ஒருவரிடம் 'நல்லதும் கெட்டதும் சமமாக இருக்கும் இவ்வுலகில் நல்லதை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்களே அது ஏன்' என கேட்டார் அவரது நண்பர். என்னுடன் சாப்பிட வா பிறகு பேசலாம் என அழைத்தார் அறிஞர். நண்பருக்கு சாப்பிட கழுதைச்சாணம் வைக்கப்பட்டது. அதை கண்டு அவர் கோபப்பட்டார். கழுதை பால் ஆரோக்கியமானது. அது போல் தான் அதன் சாணமும் என்றார் அறிஞர். புரிந்து கொண்ட நண்பர் இனிமேல் இது போன்ற கேள்வியை யாரிடமும் கேட்க மாட்டேன் என மனதில் உறுதி கொண்டார்.