உள்ளூர் செய்திகள்

அன்பும்! பற்றும்!

மகிழ்ச்சியாக வாழ அன்பு அவசியம். ஆனால் பலரும் அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் திணிக்கின்றனர். இதை 'பற்று' என்று சொல்லலாம். அன்புக்கும், பற்றுக்கும் வேறுபாடு உண்டு.உதாரணமாக பறவையை கூண்டில் அடைத்து, அதை பாதுகாக்கும் பொறுப்பில் சிக்குபவன் பற்று கொண்டவன் ஆவான். இதுவே பறவையை பறக்க விட்டு, அது பறப்பதை மகிழ்ச்சியாக வேடிக்கை பார்ப்பவன் அன்பு கொண்டவன். அதாவது பற்று கொண்டவன் பிறரது சுதந்திரத்தை கெடுப்பதோடு, தனது நிம்மதியையும் இழப்பான். ஆனால் அன்பு கொண்டவனோ பிறருக்கும் சுதந்திரம் கொடுத்து, தானும் நிம்மதியாக வாழ்வான்.