பெற்றோரை நேசியுங்கள்
UPDATED : மே 02, 2023 | ADDED : மே 02, 2023
எல்லோரும் இந்த உலகில் செல்வச்செழிப்போடும் புகழோடும் இருக்க காரணம் பெற்றோர். சில பிள்ளைகள் அவர்களது சொல் கேளாமல் தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுவர். பயனற்றதும், தீமை தருவதுமான பொழுதுபோக்கிற்கு பணத்தை செலவிட்டு, பெற்றவர்களை குறை சொல்வதால் என்ன பயன். சிலர் நன்றி மறந்து ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை உணவு கூட கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்கான அறிவுரையாக 'உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக, அவர்களது சொல்வதை கேட்டு நட' என்கிறது பைபிள்.