உள்ளூர் செய்திகள்

மனம் ஒரு குரங்கு

குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. அதன் பிடி தவறியதால் கீழே இருந்த முட்புதரில் விழுந்தது. வலியால் துடித்தது. நமது மனமும் இப்படித்தான்... நிமிடத்திற்கு நிமிடம் தாவுகின்ற மனதால் நாம் அடையும் துன்பத்திற்கு அளவே இல்லை. இதற்கு காரணம் எண்ணச் சிதறல்கள். இதை தவிர்த்தால் எதையும் எளிதில் செய்து முடிக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.