குயில் பாட்டு
UPDATED : ஜூலை 02, 2023 | ADDED : ஜூலை 02, 2023
குயிலின் பாடலை கேட்ட மற்ற பறவைகள் அதனிடம் இப்போதெல்லாம் நீ ஏன் பாடுவதில்லை என கேட்டது. அதற்கு தவளை எனக்கு போட்டியாக நானும் பாடுவேன் என கூச்சலிடுகிறது. அதனால் பாடுவதை நிறுத்திக் கொண்டேன் என்றது குயில். இது தான் காரணமா நீயோ பல இடங்களுக்கு செல்லக்கூடியவள். அது தண்ணீர், தரையில் மட்டும் வாழக்கூடியது. அதனோடு ஒப்பிட்டு உன் திறமையை வெளிப்படுத்தாமல் இருக்கிறாயே என மற்ற பறவைகள் அறிவுரை சொல்லியது. அதைக்கேட்ட குயில் மீண்டும் பாட ஆரம்பித்த போது காடு முழுவதும் அவ்வோசை பரவியது. எப்போதும் திறமைகளை வெளிக்காட்டுவதில் மும்முரமாய் இருங்கள். சோர்ந்து விடாதீர்கள் என்கிறது பைபிள்.