உள்ளூர் செய்திகள்

பிறர் துன்பத்தில் மகிழாதீர்

சிறுவர்கள் சிலர் பொழுது போக்காக குளக்கரைக்கு வந்தனர். அங்கு தவளைகள் சப்தமிடுவதைக் கேட்டனர். அருகில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து அவற்றின் மீது எறிந்தனர். தவளைகள் துன்பப்படுவதை கண்டு கைகொட்டி சிரித்தனர். அவ்வழியே வந்த பெரியவர் ஒருவர் அதைக் கண்டு வருத்தப்பட்டார். தவளைகளை இப்படி வதைத்து மகிழ்ச்சி அடைகிறீர்களே. உங்களை கல்லால் ஒருவர் அடித்தால் எப்படியிருக்கும் பெற்றோரின் மனம் வருந்தும் என நினைத்து பார்த்தீர்களா என அறிவுரை சொன்னார். இனி யாரையும் துன்புறுத்துவதில்லை என முடிவெடுத்தனர்.