உள்ளூர் செய்திகள்

வைரமாய் ஜொலியுங்கள்

''வேலைகளை சரியாக செய், நேரத்திற்கு சாப்பிடு, உடலுக்கு ஓய்வு கொடு'' என மகன் ஜானிடம் அறிவுரை சொன்னார் தந்தை. எதையும் பொருட்படுத்தாமல் துாங்கி விட்டான். மறுநாள் எழுந்து கால்போன போக்கில் நடந்து சென்றான். மூடை ஒன்று காலில் தட்டுப்பட்டது. என்ன என்று பார்த்த போது சாண உருண்டைகள் இருந்தன. அதை ஒவ்வொன்றாக எதிரே இருந்த குளத்தில் எறியத் தொடங்கினான். ஒரு சாண உருண்டை தவறுதலாக ஒரு பாறை மீது பட்டு சிதறியது. பளிச்சென்று அதில் இருந்த கண்ணாடிச்சில் சூரியஒளியில் வைரம் போல மின்னியது. அவன் மனதில் பளிச்சென ஒரு மின்னல் கீற்று வந்தது. தவறை உணர்ந்தான். தந்தை சொன்ன அறிவுரை ஒவ்வொன்றும் வைரக்கல் என உணர்ந்தான்.