புத்தியின் பிரகாசம்
UPDATED : ஜூன் 02, 2023 | ADDED : ஜூன் 02, 2023
தொழிற்சாலை இயந்திரங்களை இயக்கிய தொழிலாளர்கள் அவை செயல்படவில்லை என்பதை உணர்ந்தனர். ஏன் இயங்கவில்லை என யோசித்தார்கள். கொதிகலன் அறையை பார்த்த போது அங்கு நெருப்பு இல்லாததை கண்டனர். நெருப்பினை பற்ற வைத்தனர். சற்று நேரத்தில் இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தது. அது போல மனித உடல் சீராக இயங்குவதற்கு புத்தி என்னும் நெருப்பு பிரகாசமாக சுடர்விட வேண்டும்.