உள்ளூர் செய்திகள்

எளிமையே வலிமை

பரபரப்பான உலகம் இது. பலரும் அவசரம், ஆசை என ஒருவித பதட்டத்துடன் வாழ்க்கையை அணுகுகிறார்கள். அதில் சிலர் தன் சக்திக்கு மீறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். இதனால் தினமும் மனச்சுமை கூடுகிறது. ஏன் இந்த நிலைமை? நிதானமுடன் செயல் படலாமே... உங்களின் செயல்களை எளிமைப் படுத்துங்கள். உலகின் வெற்றிகரமான மனிதர்கள் இதைத்தான் செய்துள்ளனர். ஒருவர் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு என்னவெனில் எளிமைதான்! அதை மட்டும் அடைந்து விட்டால் வாழ்க்கை இனிக்கும். இதையே ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதையாக வடித்துள்ளார்.