உள்ளூர் செய்திகள்

அங்கேயே இருக்கும்

குளத்தில் தண்ணீர் குடிப்பதற்காக சிங்கமும் கரடியும் வந்தன. யார் முதலில் குடிப்பது என்பதில் இரண்டிற்கும் விவாதம் வந்தது. ஒன்றுக்கொன்று சளைக்காமல் சண்டையிட்டதே தவிர முடிந்த பாடில்லை. இதில் யார் இறந்தாலும் அவற்றை சாப்பிடுவதற்கு தயாராக நின்றிருந்தது கழுகு. நன்றாக இருக்கும் மனிதர்கள் கூட சண்டையிட்டுக் கொண்டு ஒற்றுமையின் தன்மை புரியாமல் வாழ்கின்றனர். எதனால் பிரச்னை ஏற்படுகிறது என்பதை சற்று சிறிது நேரம் யோசித்து பாருங்கள். பிரச்னைகளுக்கான தீர்வு அங்கேயே இருக்கும்.