வழிபடுவோர் கவனத்திற்கு...
UPDATED : ஜூலை 02, 2023 | ADDED : ஜூலை 02, 2023
தெரு வழியாக ஒரு பெரியவர் நடந்து வந்தார். அவரிடம் இளைஞர்கள் சிலர் மனம் ஒன்றி வழிபாட்டில் ஈடுபட என்ன செய்ய வேண்டும் என கேட்டனர். அதற்கு அவர் தினசரி இந்த நான்கு செயல்களை கடைபிடியுங்கள் மனம் ஒருநிலைப்படும் என்றார். * அமைதியாக வழிபாட்டில் ஈடுபடுங்கள்.* ஆலய வளாகத்தில் வயதானவர்களை பார்த்தால் மரியாதை செய்யுங்கள்.* பிறருடன் வீண் பேச்சு பேசுவதை தவிருங்கள்* மற்றவர்கள் பின்பற்றும்படியாக உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.