உள்ளூர் செய்திகள்

பார்வை ஒன்று போதும்

பணக்கார வீட்டுப்பிள்ளை திடீர் என ஞானம் பெற்று பிச்சைக்காரராக மாறினார். அவரைக் கண்ட தந்தை நம் பரம்பரையில் யாரும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லையே என சொல்லி வருத்தப்பட்டார். அவனோ அனைவரும் ஆண்டவர் முன் பிச்சைக்காரர்கள் தானே என்றான். எது உயர்வாக தெரிகின்றதோ அது மற்றவருக்கு தாழ்வாக தெரியும். எல்லாமே அவரவர் பார்வையில் தான் உள்ளது.