பலவீனமே பலம்
மனிதர்கள் பிறரால் தண்டிக்கப்படும் போது ஆண்டவரை நிந்தனை கொள்வார். காரணம் இல்லாமல் அவர் யாருக்கும் தண்டனை கொடுப்பதில்லை. அவருக்கு எல்லாம் தெரியும்.வாலிபர் ஒருவர் வண்டி ஓட்டிச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும் இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்தினர். அவர் ஒருமுறை அடர்ந்த காட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. அவரை பார்த்த காட்டு மிராண்டிகள் கடத்தி சென்று தலைவர் முன் நிறுத்தினர். இன்று இந்த நரனின் கை,கால்களை வெட்டி சூப்பு வைத்து குடிக்கலாம் என உத்தரவிட்டார். அவனுடைய கால்களை வெட்ட முயன்ற போது மரக்கால்களாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாதாரண வாலிபர் அல்ல இவர் தெய்வப்பிறவி என சொல்லி விட்டு விட்டார்கள். நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு ஆண்டவரின் கிருபையால் பலமாக மாறும். அவர் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.