எதற்கெடுத்தாலும் பயமா...
UPDATED : ஆக 11, 2023 | ADDED : ஆக 11, 2023
யானையை கண்டால் அஞ்சி நடுங்கும் முட்டாள் ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருக்கும் அவன் ஒருநாள் குறுகிய வீதியில் நடந்து சென்றான். அப்போது முன்னேயும் பின்னேயும் யானை வந்தால் என்ன செய்வது என நினைத்து யானை,யானை என சொல்லிக் கொண்டே பதறியபடி கூச்சலிட்டான். அதை கேட்ட வீதியில் வசிப்பவர்கள் எல்லோரும் வந்து அவனிடம் யானை எங்கே என கேட்டதற்கு, யானை இல்லை அது வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தேன் என சொன்னான். இப்படி தான் இல்லாத ஒன்றை நினைத்து சிலர் கற்பனையில் தங்கள் வாழ்வை பாழாக்குகின்றார்கள்.