கேளுங்க சொல்கிறோம்
ஜி.சாவித்ரி, ஆவடி, திருவள்ளூர்: தொடர்ந்து ஐந்து பிரதோஷ விரதம் இருந்தால்.....நீண்ட நாள் விருப்பமும், சுபநிகழ்ச்சியும் நிறைவேறும். வி.சரோஜாதேவி, ராம்நகர், பெங்களூரு: ராஜாங்கம், ஆண்டிக் கோலத்தில் பழநி முருகன் ஏன் இருக்கிறார்?மனிதன் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக. எல்.சச்சு, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: சுவாமிக்கு தேங்காய் உடைக்கும் போது, அது சிதறியது. பரிகாரம் உண்டா...பரிகாரம் தேவையில்லை. கஷ்டம் விலகுவதாக எண்ணுங்கள். என்.லட்சுமி, நங்கநல்லுார், சென்னை: பெண்கள் மஞ்சள் பூசுவது ஏன்?மஞ்சள் பூசினால் முகம் அழகு பெறும். அத்துடன் குங்குமமும் இடுங்கள். சி.நிர்மலா, பரமக்குடி, ராமநாதபுரம்: கர்ப்பிணிகளுக்கு ஆன்மிக ரீதியான அறிவுரை உண்டா...தேவாரம், திருவாசகப் பாடலை கேளுங்கள். பக்தி, ஒழுக்கமுள்ள குழந்தை பிறக்கும். எம்.பத்மினி, குளச்சல், கன்னியாகுமரி: குழந்தை அடிக்கடி அழுகிறதே... தன் தேவையை அழுகை மூலமாக குழந்தை சொல்கிறது. விரும்பினால் வெள்ளி அன்று அம்மன் கோயிலில் விளக்கேற்றுங்கள். ஆர்.விஜயலட்சுமி, கோவில்பட்டி, துாத்துக்குடி: அமாவாசை அன்று விரதம் இருக்கலாமா? தந்தை இருப்பவர்கள் விரதம் இருக்க கூடாது. டி.தேவிகா, சின்னமனுார், தேனி: தர்ப்பணம் செய்தால்...முன்னோர் ஆசியால் உங்கள் சந்ததியே நலமாக வாழ்வர். கே.ஜெயசுதா, பல்லடம், திருப்பூர்: குருபூஜை என்றால்...குருநாதரின் மறைவுக்கு பின், நினைவு நாளில் அவரை வழிபடுவது.