கேளுங்க சொல்கிறோம்
கணேஷ்.கா, திருநின்றவூர், திருவள்ளூர்: கடனால் சிரமப்படுகிறேன். வழி காட்டுங்கள்?கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை சிவனை வழிபடுங்கள். சுந்தர்.மு, திருநாவலுார், கள்ளக்குறிச்சி: கொடுத்த பணத்தை இரவில் வாங்கலாமா?எந்த நேரத்திலும் வாங்கலாம். சுபா.எம், ஆர்.எஸ்.புரம், கோயம்புத்துார்: வராகியை வழிபட்டால்…எதிர்மறை எண்ணம் மறையும். எதிரி தொல்லை தீரும். புவனா.எஸ், ஆமத்துார், விருதுநகர்: செயலில் தடை, தாமதம் ஏற்பட்டால்... துர்கையை வழிபடுங்கள். பிரச்னை தீரும். கோமதி.கே, வீரவநல்லுார், திருநெல்வேலி: சித்தர்களை வழிபட ஏற்ற நேரம்...பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 - 6:00 மணி.ராஜா.ரா, ராமமூர்த்தி நகர், பெங்களுரு: வழிபாட்டுக்கு சிறந்தது காலை நேரமா... ஆம். ஒரு நாளின் தொடக்கம் காலை. அப்போது வழிபட்டால் அன்று நல்லது நடக்கும். பரிமளா.பி, உத்தமபாளையம், தேனி: தர்மம் என்றால்... பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இல்லாமல் வாழ்வதே.விமல்.கு, வேளச்சேரி, சென்னை: கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டால்...புண்ணியம். குடும்பம் தழைக்கும். நல்ல குழந்தை பிறக்கும். புருஷோத்தமன்.ஆர், பூதப்பாண்டி, கன்னியாகுமரி: மாடக்கோயில் என்றால்...கோட்செங்கச் சோழனால் கட்டப்பட்ட கோயில்கள். இங்கே யானை உள்ளே செல்ல முடியாது.