கேளுங்க சொல்கிறோம்
கவிதா.எஸ், கரோல்பார்க், டில்லி: என் சகோதரர் பெற்றோரை புறக்கணிக்கிறார். அவர் தொண்டு செய்வது சரியா...சரியல்ல. பெற்றோரை புறக்கணிப்பது பாவம். தொண்டு செய்தாலும் அவருக்கு புண்ணியம் சேராது.மணி.சி, சின்னமனுார், தேனி: பல ஆண்டாக குடும்பத்தில் சகோதர பகை தொடர்கிறது. தீர வழியுண்டா?கவுரவம் பார்க்காமல் அவரிடம் மனம் விட்டு பேசுங்கள். செவ்வாய், சனிக்கிழமையில் நவக்கிரகத்திற்கு விளக்கேற்றுங்கள். நீலகண்டன்.ரா, துாத்துக்குடி: பிறந்த குழந்தையுடன் கோயிலுக்கு எப்போது செல்லலாம்?உங்கள் குடும்ப வழக்கப்படி தீட்டுக்குரிய நாளை முடிவு செய்த பின் கோயிலுக்கு செல்லலாம். தேவகி.ஆர், புவனகிரி,கடலுார்: பூஜையில் சொல்ல வேண்டிய சூரியனுக்குரிய ஸ்லோகம்...ஆதித்யம் பாஸ்கரம் பானும் ரவிம் ஸூர்யம் திவாகரம்|நாம ஷட்கம் ஸ்மரேத் நித்யம்ஸர்வபாப ப்ரநாசனம்||ஆர்த்தி.கு, ஆவடி, திருவள்ளூர்: சிவ, ராம மந்திரங்கள் எழுதிய நோட்டை என்ன செய்யலாம்?பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நாம வங்கிக்கு அனுப்புங்கள். ஞானசேகரன்.தா, குளச்சல், கன்னியாகுமரி: எந்த சுவாமிக்கு எந்த பூ...விநாயகர் - அருகம்புல் முருகன் - செவ்வரளி சிவன் - வில்வம் பெருமாள் - துளசி அம்மன் - மல்லிகை குருபகவான் - முல்லை ராகேஷ்.எம், கோடம்பாக்கம், சென்னை: தீட்டு காலத்தில் வழிபடாமல் இருப்பது வருத்தமாக உள்ளதே... கடவுளின் பெயரைச் சொல்லி வந்தால் வருத்தம் இருக்காதே. குமார்.கோ, தேவகோட்டை, காரைக்குடி: அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்...வாழும் போதே நரகத்திற்கு செல்ல ஆசையா? முருகன்.எஸ், மருதமலை, கோயம்புத்துார்: கொடிய பாவம் என்றால்...நம்பிக்கை துரோகம், பொய், கொலை, திருட்டு, மது.