உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.ராகுகாலம் என்றால் என்ன? வெள்ளியன்று ராகுகாலத்தில் வழிபடுவதால் என்ன பயன்? பி.சாவித்திரி, கம்பம்கிரகங்கள் ஒன்பதில் ஏழிற்கு ஏழு கிழமைகள் உள்ளன. ராகு, கேதுவுக்கு கிழமைகள் கிடையாது. இதனாலேயே ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என ராகுவிற்காகவும், எமகண்டம் என கேதுவிற்காகவும் அமைந்துள்ளது. ராகுவிற்கு அதிதேவதையாக துர்கையம்மன் இருப்பதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷங்கள் நீங்கி திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.* சுவாமி விக்ரகங்களைத் தொட்டுக் கும்பிடுகிறார்களே! இது சரியா? ஜி.பி.எஸ்.தனலட்சுமி, அருப்புக்கோட்டைவிக்ரகங்களை அதற்குரியவர்களைத் தவிர மற்றவர்கள் தொடக்கூடாது. இப்படிச் சொன்னால் சிலர் தவறாகப் புரிந்து ஜாதிப் பிரச்னையாக்குகிறார்கள். எல்லோரையும் வேறுபாடு இல்லாமல் சமநிலையாக பக்தர்கள் என்ற ஒரே நோக்கில் பார்ப்பது கோயில்களில் மட்டும் தான். அர்ச்சகர்களோ, பட்டாச்சாரியார்களோ பக்தர்களின் நலனுக்காகவே பூஜை செய்கிறார்கள். அதற்கென சில நியதிகளை அவர்களுக்கு சாஸ்திரம் விதித்திருக்கிறது. எல்லோரையும் போல் தலைமுடி, உடை, இவைகளை அவர்கள் அனுபவிப்பதில்லை. கிடைத்ததை சாப்பிடுவதில்லை. கோயிலில் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக சில இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். இப்படி இருந்து பூஜை செய்தால் தான் எல்லோரும் நன்மை பெறலாம். எல்லோரும் சுவாமி விக்ரகங்களைத் தொட்டு வழிபட்டால் நெறி நின்று செய்யப்பட்ட பூஜையின் புனிதத் தன்மை கெடும். பலன் குறையும். பாதிப்பு ஏற்படும். இதனால் தான் கட்டுப்பாடு. ** வேண்டுதலை நிறைவேற்ற மறந்தாலும் கஷ்டங்கள் வருமா? கிருபாதேவி, கோவைகண்டிப்பாக வரும். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் மறக்காமல் இறைவனை வேண்டிக் கொள்கிறோம். நல்லது நடந்தபின் மறந்துவிட்டேன் என்று சொல்வதே சரியாயில்லையே! வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு பிறகு மறந்துவிடுவது என்பது- ஆன்மிகவாதிகள் சமூகத்தில் கூடாதே!! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தெய்வம் உங்களிடம் எதுவும் கேட்பதில்லை. நீங்களாக வேண்டிக் கொள்கிறீர்கள். பிறகு மறந்துவிட்டேன் என்றால் அது தெய்வ குற்றம் தானே?தகப்பனார் இறந்து ஒருவருடம் வரை மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லக்கூடாது என்கிறார்களே, ஏன்? எம்.மயில்ராஜ், மதுரைதாய் இறந்தாலும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர் இறந்து ஒரு வருடம் வரை பித்ரு தீட்சை என்ற விரதம் இருக்க வேண்டும். இறந்த திதியை ஒவ்வொரு மாதமும் சிராத்தம் செய்து கழிக்க வேண்டும். முடிவெட்டுதல், சவரம் செய்து கொள்ளுதல், தீர்த்தயாத்திரை, மலைமேல் உள்ள கோயில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு பண்டிகைகள் கொண்டாடுதல் முதியவற்றை விலக்கி வருடம் முழுவதும் பிதுர்கடன் என்ற எண்ணத்தோடு சிரத்தையாகச் செய்தால் தான் பெற்றோரின் ஆத்மா சாந்தி யடைந்து இறைவனடி சேருமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. தீர்த்த யாத்திரை, மலைக்கோயில் தரிசனத்தை விட நிறைய பலன்களை'பித்ரு தீட்சை'எனும் விரதம் தரும்.