உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எம்.முத்துலட்சுமி, திருநெல்வேலி*தங்கையான என்னிடம் சகோதரர்கள் அன்புடன் நடக்க யாரை வழிபடலாம்?தங்கை திரவுபதியின் மானம் காத்த பகவான் கிருஷ்ணரை வழிபடுங்கள். கோபாலா... கோவிந்தா...என்னும் திருநாமத்தை நம்பிக்கையுடன் ஜபியுங்கள். த.சிவாஜி மூக்கையா, கடலுார்*புனித தீர்த்தம் பூஜையறையில் எத்தனை நாள் இருக்கலாம்?எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாவிலையால் தீர்த்தத்தை வீட்டில் தெளிப்பது நல்லது. ப.தேவி, கோவை*குளித்ததும் மானசீகமாகக் கோயிலுக்குச் செல்வதாக நினைத்தால் பலனுண்டா?உண்டு. கொரோனா அலை ஓயும் வரை இதை பின்பற்றுவது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. ஜி.நீலா, பெரும்பாக்கம், சென்னை *கிரகணத்தின் போது வீட்டில் விளக்கேற்றலாமா?கிரகணம் வரும் முன்னரே விளக்கேற்றுங்கள். கிரகணம் முடியும் வரை குடும்பத்துடன் நாம ஜபம், ஸ்லோகம் சொல்லுங்கள். கிரகணம் முடிந்ததும் தலைக்கு குளித்து பூஜை செய்யவும். மு.தமிழ்ச்செல்வம், சூரக்குடி, துாத்துக்குடி*தர்ப்பணம் செய்தபின் கோயில் வழிபாடு, கடல் தீர்த்தம் எடுத்தல் செய்யலாமா?தர்ப்பணம் என்பது புனிதமான செயலே. அதன்பின் கை,கால்கள் கழுவி திருநீறு பூசியபடி வீட்டுக்கு தீர்த்தம் எடுத்தல், கோயில் வழிபாடு செய்தல் ஆகியவை விசேஷ பலனைத் தரும். எல்.கார்த்திகா, பெங்களூரு*வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறக்கக் கூடாதா...அப்படியில்லை. வெள்ளியன்று பெண்ணும், ஞாயிறன்று ஆணும் பிறந்தால் யோகம் என்பது உண்மை. அதற்காக வெள்ளியன்று ஆண் பிறக்கக் கூடாது எனக் கருதுவது தவறு.எம்.கீதா, மதுரை*வருத்தம் தரும் பழைய சம்பவங்களை மறக்க முடியவில்லையே...தனிமையை தவிர்த்தால் வருத்தமான சம்பவங்களை சிந்திக்க மாட்டீர்கள். சந்தோஷம் தரும் இனிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள். கு.கோப்பெருந்தேவி, மவுலிவாக்கம், சென்னை*தாத்தாவுக்கு (மகன் இருக்கும் போது) பேரன் திதி கொடுக்கலாமா?திதி கொடுக்கும் அதிகாரம் மூத்த மகனுக்கு மட்டுமே உண்டு. இல்லாத பட்சத்தில் பேரன் கொடுக்கலாம்.