மனப்பாடப்பகுதி
UPDATED : பிப் 09, 2018 | ADDED : பிப் 09, 2018
பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்கள்ளமே செய்கிலர் கருதிய கானப்பேர்உள்ளமே கோயிலா உள்ளும் என் உள்ளமே.(திருஞானசம்பந்தர் தேவாரம்)பொருள்: விண்ணில் இருந்து விழுந்த கங்கையை, விரிந்த ஜடாமுடியில் தாங்கியவரே! வெண்மையான சந்திரனை தலையில் சூடியவரே! துாய மனம் கொண்ட பக்தர்களிடம் கோயில் கொண்டவரே! காளையார் கோயிலில் வீற்றிருப்பவரே! என் மனதில் எப்போதும் உன்னை தியானிக்கிறேன்.